07 December, 2012

உண்மையான சைவம்

ஒரு சிஷ்யன் தன குருவிடம் கேட்டான் குருவே, "உண்மையான சைவம் உண்ணுபவன் யார்?", அதற்கு குரு கூறினார்,
"காக்காய் கறி  சமைத்து
 கருவாடு மென்று தின்பவனே
 - உண்மையான் சைவம் உண்ணுபவன்" என்று..
சிஷ்யன் மிரண்டு விட்டான்.. என்ன இது குரு இப்படி கூறுகிறார். காக்காய் கறியையும் கருவாடையும் உண்ணுபவன் சைவமா  என்று..
இந்த சந்தேகத்தை குருவிடமே கேட்டான். அதற்கு குரு விளக்கினார்

"காக்காய் கறி - கால் காய் கறி  ( அதாவது கால் என்றால் பிஞ்சாக உள்ள காயை கறி  சமைத்து )
கருவாடுமென்று - (தன்  கருவாகிய உயிர் வாடுமென்று) உண்ணுபவன் சைவம்."

சாப்பிடுவதற்காக வாழாமல் சாப்பிடாமல் இருந்தால் தன் கருவாகிய உயிர் போய் விடுமே என்று, பிஞ்சாக உள்ள காயை கறி  சமைத்து அளவாக உண்பவனே சைவம் சாப்பிடுபவன் என்று பொருள்...

No comments:

Post a Comment

Please add your valuable comments...