09 January, 2013

மொபைல் ரிப்பேர் Fraud

=== From the email received ===

 Mobile Repair Fraud
 
மொபைல் ரிப்பேர்:




இந்தியாவில் நிறைய பேர் நல்ல மொபைல்களை வாங்குகின்றனர். மொபைல் வாங்கும்போது
32 பல்லை நன்கு காட்டி விற்கும் பெரிய பெரிய ஷோரூம்கள் கூட வாங்கி கடைக்கு
வெளியே வந்த பிறகு திரும்பி அடுத்த 10 நிமிஷத்தில் கடைக்குள் போனால் கூட
நம்மளை ஏனோ பிச்சைக்காரன் மாதிரிதான் பார்ப்பாங்க. ஓ பிராபளமா நீங்கள் இந்த
கம்பெனி சர்வீஸ் சென்டருக்குதான் போகனும்னு சொல்லுவாங்க.

முன்னாடியெல்லாம் நம்ம ஸ்கூட்டர்ல இருந்து கார் வரைக்கு எதாவது ரிப்பேர்னா
உடனே சர்வீஸ் சென்டருக்கு போறதுக்கு முன்னாடி நண்பர்கள் கிட்ட விசாரிப்போம்
ஏதாவது மெக்கானிக் பிரன்டு அந்த சர்வீஸ் சென்ட்ரல இருக்காங்களான்னு ஏன்னா
தெரிஞ்ச ரெஃபரன்ஸ்னா உடனே அங்க வர்ர புது வண்டியில் இருக்கு ஒரு பாகம் உங்க
வண்டிக்கு மாற்றப்படும் அப்புறம் அவருக்கு கொஞ்சம் கேஷ் கவனிப்பு இப்படித்தான்
காலம் காலமா வாழ்ந்துகிட்டு வரோம் அதே மாதிரி மொபைல் சர்வீஸ் கம்பெனிகள்.


நாங்கெல்லாம் ஒரிஜினல் ஷோ ரூம்ல சர்வீஸ் பன்றோம்ன்னு நீங்க சொன்ன - நீங்க வடிகட்டின முட்டாள்கள்னு நான் சொல்லல ஆய்வு சொல்லுது. பெரிய பெரிய சர்வீஸ் ஷோ ரூம்களின்

மெக்கானிக்குகள் சைட்ல ஆயிரகணக்கா பணம் பண்றாங்க
அதாவது நம்ம செட்டை வாங்கின உடனே அந்த அட்டைபெட்டியை தூக்கி போட்டிருவோம். அதுக்கு அப்புறம் அந்த ஐ எம் ஐ ( இன்டர்னேஷ்னல் மேனுபாஃக்சரிங் ஐடென்டிஃபிக்கேஷன்)
IMEI நம்பரை நாம் சட்டை செயவதில்லை. அதை ஒரு கான்டக்டில் ஸ்டோர் பண்ணீ
வையுங்கள் மொபைல் ரிப்பேர் பண்ன குடுக்கும் போது அந்த சர்வீஸ் ரெசிப்ட்
பிண்ணாடி எழுதி வையுங்கள். சர்வீஸ் முடிந்த பிறகு சாஃப்ட்வேர் அப்கிரேட்
அல்லது வைப் பன்ணியிருந்தால் கான்டெக்ட் அழிந்திருக்கும் அப்போது அந்த சர்வீஸ்
ரெசிப்ட்டில் உள்ள ஐ எம் ஐ நம்ப்ரும் உங்களுக்கு ரிப்பேர் செய்து கொடுக்கும்
நம்பரும் சரியா என பாருங்கள். (*#06# )



IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
உங்கள் மொபைல் -இல்    *#06#  அழுத்துங்கள்.
16 இலக்க எண் வரும். அதுவே உங்கள் IMEI  எண்  ஆகும்.


ஏன் என்றால் சர்வீஸ் ஷோ ரூம் ஆட்கள் நல்ல செட்டை மாற்றிவிடுகின்றனர். அது போக
சில ஷோரூம்களில் தண்ணீர் பட்ட போர்ட் மற்றூம் கிராக்டு போர்ட் எல்லாம்
உங்களுக்கு மாற்றி தந்து உங்க நல்ல போர்ட் காசு கொடுக்கும் இன்னொரு ஆளூக்கு.
சார் நாங்கெல்லாம் அப்பவே அப்படி கொடுக்கும் போதே பின்னாடி லெஃப்ட் ஓரத்தில
ஒரு சின்ன கீரல் அதை வெச்சே என்னோட ஃபோனான்னு கண்டுபிடிசிடுவேன்னு சொன்னா ஐயோ
பாவம் தான் நீங்கள். ஏன்னா ஷெல் அப்படியே இருக்கும் ஒன்லி உள்ளே உள்ள போர்ட்
தான் காணாமல் போகும். சில பேர் ஸ்மார்ட்டா ஐ எம் ஐ பிண்ணாடி பேட்டரி பொடற
எடத்தில செக் பன்னுவாங்க ஆனா அதுவும் மாயை ஏன்னா நான் கூறியபடி வெளியே கூடு
அப்படியே இருக்கும் ஆனா உங்க போர்ட் மாறினா ஐ எம் ஐ மாறும் அதை மற்றூம்
இவர்கள் மாற்ற முடியாது அது ஒரு வாட்டி போட்டா அவ்வளவு தான். அது போக உங்க ஐ
எம் ஐ மாத்தி கொடுத்த் ஆள் ஏதாவது கால் பண்ணி சைபர் கிரைம்ல மாட்டினா ஐ எம் ஐ
வச்சு போலீஸ் கண்டுபிடிச்சு அப்புறம் சொல்லனும் நான் அவன் இல்லைனு. சோ மொபைல்
ரிப்பேர், சர்வீஸ், சாஃப்ட்வேர் அப்கிரேடுக்கு கொடுத்தா உடனே இந்த ஃபார்முலா
யூஸ் பன்ணீ செக் பன்ணி வாங்குங்க ப்ளீஸ். ஐ ஃபோன் போன்ற நிரைய போன்கள் நம்ம
பின்னாடி திஅறக்க முடியாத காரணத்தினால் இந்த செக்கிங் அவசியம். திருப்பி அதே
சர்வீஸ் காரன்ட்ட போனா சார் இந்த் ஃபோனும் ஐ எம் ஐயும் சம்பந்தம் இல்லைசார்
உங்க ஃபோனை யாரோ டேம்பர் பன்ணியிருக்காங்க்ன்னு உங்களுக்கு இனிமா கொடுத்து
நீங்க இன்னொரு ஃபோன் வாங்க போகனும் சாக்கிரதை.

உங்க ஃபோன் IMEI நம்பர் திருட்டு பொருள் அல்லது ஒரிஜினல் பார்க்குனும்னா இந்த
லின்க்ல 16 இலக்கத்தை போட்டு வேலிடேட்னு போட்டா சொல்லும் நீங்கள் ஒரிஜினலா
இல்லையான்னு - அப்படி வேலிடேட் ஃபெயில்னா அது டுபாக்கூர் ஃபோன்னு
அர்த்தம். (இது கள்ள மார்க்கெட் சைனா கொரியா செட்டுக்கு வேலை செய்யாது) - LINK
to Validate - http://imei-number.com/imei-validation-check

In India you can check by sending an SMS also to verify - All you need to
do is to send a message with text IMEI to number 53232 or 57886. You will
receive response in few minutes.

IF stolen or missing your phone can be LOCKED permanently.

அழகு குறிப்புகள்: பருக்கள் போக


அழகு குறிப்புகள்

பரு போக 
 


‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.
பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பரு போய் விடும். 
 
மற்றுமொரு ஆலோசனை:
தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.
ஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். அதற்கு கரகரவென்று அரைத்த பச்சரிசி மாவுடன் பன்னீர் கலந்து மூக்கு மற்றும் தாடை ஓரம் மென்மையாகத் தேய்த்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்..

அழகு குறிப்புகள்: கூந்தலை பராமரிக்க சில ஆலோசனைகள்..


கூந்தலை பராமரிக்க சில ஆலோசனைகள்..

நீங்கள் உங்கள் கூந்தலுக்கு என்ன தான் ஷாம்பூ போட்டு நிறைய தண்ணீர்  விட்டு அலசினாலும் ஷாம்பூ மற்றும் அதனுடைய கெமிக்கல் உங்கள் தலையிலேயே இருக்கும் என்பது உங்களுக்கு  தெரியுமா?

ஷாம்பூவை அப்படியே நேரிடையாக தலையில் தேய்த்து கொள்ள கூடாது. அப்படி செய்தால் உங்கள் தலை முடி சீக்கிரம் உதிர்ந்து விடும்.

பின் எப்படி ஷாம்பூ தேய்த்து கொள்ள வேண்டும்?

ஷாம்பூவில் தண்ணீரைக் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக் கொண்டு பின்னர் தலைக்கு தேக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஷாம்பூ நல்ல விளைவுகளை தரும்.
மேலும் சில டிப்ஸ்:
1.
எப்போதும், என்ன அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக் கூடாது. டவலால் நன்றாகத் துடைத்து, ஈரம் போய் உலர்ந்தவுடன், நல்ல தரமான பெரிய பற்களுடைய சீப்பினால் வாரி சிக்கெடுக்க வேண்டும். மரச்சீப்பு அல்லது நைலான் பிரஷ்ஷால் வாருவது மிகவும் நல்லது.
2.
வாரம் இருமுறையாவது தலையை அலச வேண்டும்
3.
இரவு படுக்கும்முன், கூந்தலை மென்மையான ப்ரஷ்ஷினால் வாரி, பின்னாமல் அப்படியே விட்டு விட்டுப் படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும்
4.
மாதம் ஒருமுறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம்செய்துகொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்
5.
அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல. வேண்டுமானால், டவலால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே, உபயோகிக்கலாம்
6.
கூந்தலை ப்ளீச் செய்வது, கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

இள நரை பிரச்சனையை தடுக்க...

‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.
இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’