கூந்தலை பராமரிக்க சில ஆலோசனைகள்..
நீங்கள் உங்கள் கூந்தலுக்கு என்ன தான் ஷாம்பூ போட்டு நிறைய தண்ணீர் விட்டு அலசினாலும் ஷாம்பூ மற்றும் அதனுடைய கெமிக்கல் உங்கள் தலையிலேயே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஷாம்பூவை அப்படியே நேரிடையாக தலையில் தேய்த்து கொள்ள கூடாது. அப்படி செய்தால் உங்கள் தலை முடி சீக்கிரம் உதிர்ந்து விடும்.
பின் எப்படி ஷாம்பூ தேய்த்து கொள்ள வேண்டும்?
ஷாம்பூவில் தண்ணீரைக் கலந்து நன்றாக நுரை வரும்படி
கலக்கிக் கொண்டு பின்னர் தலைக்கு தேக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஷாம்பூ நல்ல விளைவுகளை தரும்.
மேலும் சில டிப்ஸ்:
1. எப்போதும், என்ன அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக் கூடாது. டவலால் நன்றாகத் துடைத்து, ஈரம் போய் உலர்ந்தவுடன், நல்ல
தரமான பெரிய பற்களுடைய சீப்பினால்
வாரி சிக்கெடுக்க வேண்டும். மரச்சீப்பு அல்லது நைலான் பிரஷ்ஷால் வாருவது மிகவும் நல்லது.
2. வாரம் இருமுறையாவது தலையை அலச வேண்டும்
3. இரவு படுக்கும்முன், கூந்தலை மென்மையான ப்ரஷ்ஷினால்
வாரி, பின்னாமல் அப்படியே விட்டு விட்டுப் படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும்
4. மாதம் ஒருமுறை கூந்தலின் அடிப்பகுதியை ‘ட்ரிம்’ செய்துகொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்
5. அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல. வேண்டுமானால், டவலால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே, உபயோகிக்கலாம்
6. கூந்தலை ப்ளீச் செய்வது, கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது
போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே
தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர்
ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.
இள நரை பிரச்சனையை தடுக்க...
‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை
கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய்
அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச்
சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால்
கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.
இந்த
எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில
வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில்
நரைக்காது..’’